கடன் பிரச்சினையால் விபரீதம்: மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆசிரியர் தற்கொலை

கடன் பிரச்சினையால் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
கடன் பிரச்சினையால் விபரீதம்: மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று ஆசிரியர் தற்கொலை
Published on

கரூர்,

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் முகமது பரீத் (வயது 49). இவர் கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நஸ்ரின்பானு (39). இந்த தம்பதிக்கு ஜூகிந்நாஜ் (16) என்ற மகளும், தன்வீர் (9) என்ற மகனும் உள்ளனர். மகள் ஜூகிந்நாஜ் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தன்வீர் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவர்களுடன் முகமது பரீத்தின் தாய் உம்மு ஹபீபாவும் வசித்து வருகிறார். முகமது பரீத்துக்கு புதிதாக வீடு வாங்கியதில் கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. கூட்டுறவு வங்கியிலும், தேசிய வங்கியிலும் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விஷம் கலந்த தண்ணீர்

இதனால் முகமது பரீத் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த அவர் நேற்று முன்தினம் தென்னை மரத்திற்கு தெளிக்கும் சல்பர் மாத்திரைகளை (விஷம்) வாங்கி வந்து, தண்ணீரில் கலந்துள்ளார். பின்னர் அவர், மந்திரித்து கொண்டு வந்த தண்ணீர் எனக்கூறி மனைவி மற்றும் மகளுக்கு கொடுத்துள்ளார். அந்த தண்ணீரில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவர்கள் அதை வாங்கி குடித்தனர். பின்னர் முகமது பரீத்தும் அந்த தண்ணீரை குடித்துள்ளார். ஆனால் தனது தாயாருக்கும், மகன் தன்வீருக்கும் விஷம் கலந்த தண்ணீரை கொடுக்கவில்லை. விஷம் கலந்த தண்ணீரை குடித்ததில் முகமது பரீத்தும், சிறுமி ஜூகிந்நாஜ்ஜிம் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், நஸ்ரின் பானு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com