மகன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு: டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமுல்லைவாயலில் மகன் இறந்த சோகத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு: டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருமுல்லைவாயல், மூர்த்தி நகர், நாகவல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் (வயது 33). டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு ஜஸ்வந்த் (5) மற்றும் மைலேஷ் (4) ஆகிய 2 மகன்கள் உண்டு. இதில் ஜஸ்வந்த் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து மகன் இறந்த துக்கத்தில் கண்ணப்பன் வேலைக்கு சரிவர செல்லாமல் மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனா தனது 2-வது மகன் மயிலேஷை அழைத்துக்கொண்டு வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் ஏற்பட்ட சோகத்தில் வீட்டில் இருந்த கண்ணப்பன் நேற்று காலை வீட்டில் மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுல்லைவாயல் போலீசார் கண்ணப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com