மாமல்லபுரத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

4 பேர் பலி

ஆழ்துளை குழாயை பொருத்த இரும்பு பைப்பை உயர்த்தியபோது மேலே சென்ற மின்சார கேபிள் மீது உரசியுள்ளது. இதனால் இரும்பு பைப் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது, இரும்பு பைப்பை பிடித்திருந்த 4 தொழிலாளர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிரபு (வயது 22), பாட்ஷா (வயது 45), ராஜேந்திரன் (55), பாலாஜி (வயது 32) ஆகிய 4 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 4 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்கும்போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com