சிவகங்கை அருகே சோகம்: மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி நண்பர்கள் பலி

இன்னும் சில நாட்களில் துபாய் நாட்டுக்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சிவகங்கை அருகே சோகம்: மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி நண்பர்கள் பலி
Published on: 

சிவகங்கை,

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நண்பர்கள்

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை அடுத்த மேலப்பூங்குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 26). இவர் இன்னும் சில நாட்களில் துபாய் நாட்டுக்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். இவருடைய நண்பர் ஆதி கார்த்திக் (23). வெளிநாட்டில் வேலை பார்த்த அவர் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஒக்கூரில் இருந்து மதகுபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

பரிதாப பலி

இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆதிநாராயணன், ஆதிகார்த்திக் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு

தகவல் அறிந்து வந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின் மற்றும் மதகுபட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான 2 பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com