தொண்டி அருகே சோகம்: குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகள் பரிதாப பலி

குளத்தில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டி அருகே சோகம்: குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகள் பரிதாப பலி
Published on

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி மற்றும் பாலமுருகன் என்பவரது மகள் பிரீத்தி மற்றும் நாயகம் என்பவரது மகள் நர்மதா ஆகிய மூன்று சிறுமிகளும் அங்குள்ள பள்ளிவாசலுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது சேற்றுடன் இருந்த ஆழமான பகுதிக்கு சென்ற மூவருக்கும் நீச்சல் தெரியாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினர். இதைக்கண்டு மற்ற சிறுமிகள் கூச்சலிட்டனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில், அங்கே ஏற்கனவே வைத்தீஸ்வரி மற்றும் ப்ரீத்தி ஆகிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நர்மதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி பலியான பிரீத்தி 6-ம் வகுப்பும், வைத்தீஸ்வரி 5-ம் வகுப்பும் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com