நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போது பயங்கரம்: சாலையில் கவிழ்ந்த வேன் - 20 பேர் படுகாயம்


நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போது பயங்கரம்: சாலையில் கவிழ்ந்த வேன் - 20 பேர் படுகாயம்
x

உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை ,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முன்னதாக கும்பகோணத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் நிச்சயதார்த்தத்திற்காக காஞ்சிபுரத்திற்கு வேனில் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் பயணம் செய்த வேன், உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது அதன் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story