துணி காயப்போட சென்றபோது பரிதாபம்: மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
Published on

குலசேகரம்,

நாகர்கோவில் அருகே உள்ள குலசேகரம், ஆரணிவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 71). தொழிலாளியான இவருக்கு செல்லம் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மின்சாரம் தாக்கி

சந்திரன், அவரது வீட்டில் மின் இணைப்புக்கு சர்வீஸ் லைன் கட்டுவதற்காக நிறுத்தப்பட்ட இரும்பு குழாயில் துணி உலர போடுவதற்கான கொடியை கட்டி வைத்துள்ளார். நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 8 மணியளவில் வீட்டில் வந்து குளித்து விட்டு தான் அணிந்திருந்த ஈரமான துணிகளை காய வைப்பதற்காக கொடியில் விரிக்க சென்றார். அப்போது திடீரென சந்திரனை மின்சாரம் தாக்கி தூக்கி எறிந்தது.

வழக்குப்பதிவு

இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com