முருங்கைக்காய் பறித்த போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது பட்டது
முருங்கைக்காய் பறித்த போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி தென்றல் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (வயது 56). இவர் வீட்டின் அருகில் இருந்த முருங்கை மரத்தில் காய்த்து கிடந்த முருங்கைக்காய்களை இரும்புக் கம்பியால் தட்டி பிடுங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் அணிந்திருந்த செருப்பு இடறி நிலை தடுமாறி உள்ளார்.

அவரது கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் தாமரைச் செல்வியின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com