

திருச்சி,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நச்சலூர் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம்(வயது 50). விவசாயியான இவர் நேற்று தனது மகன் மகேந்திரனுடன்(30) ஒரு மோட்டார் சைக்கிளில் சமயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை மகேந்திரன் ஓட்ட ராஜலிங்கம் பின்னால் அமர்ந்திருந்தார். திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகர் என்ற இடத்தில் அவர்கள் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தந்தை-மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.