தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 1,914 டன் உரம் வந்தது

தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 1,914 டன் உரம் வந்தது
Published on

தர்மபுரி:

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் தர்மபுரிக்கு 1,914 டன் உரம் வந்தது. இந்த உரங்களை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி வேளாண்மை இணை இயக்குனர் விஜயா மேற்பார்வையில் நடைபெற்றது. வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன், வேளாண்மை அலுவலர் ருத்ரமூர்த்தி ஆகியோர் இந்த பணியை நேரில் ஆய்வு செய்தனர். தர்மபுரிக்கு 724 டன் யூரியா, 249 டன் டி.ஏ.பி., 264 டன் காம்ப்ளக்ஸ், 64 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட உரக்கடைகளுக்கு 86 டன் காம்ப்ளக்ஸ், 48 டன் பொட்டாஷ், திருவண்ணாமலை மாவட்ட உரக்கடைகளுக்கு 129 டன் பொட்டாஷ், 86 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. மேலும் இருப்பு கிடங்கில் 8 டன் பொட்டாஷ், 256 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com