ரெயில் விபத்து: மீட்புப் பணிகளை முதல்-அமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார் - கனிமொழி தகவல்

ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரெயில் விபத்து: மீட்புப் பணிகளை முதல்-அமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார் - கனிமொழி தகவல்
Published on

சென்னை,

மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிப்பதாவது,

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீட்புப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், துயர் சூழ்ந்த இந்த வேளையில், அவர்களின் குடும்பத்தினர் உறுதியுடன் இருக்கவும் விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com