ஆவடியில் புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து...!

ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவள்ளூர்,

அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. ஆவடி ரெயில் நிலையத்திற்கு வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் இருப்புப்பாதையை விட்டு கீழே இறங்கி விபத்துக்கு உள்ளானது.

இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com