ரெயில் மோதி தொழிலாளி பலி

அரக்கோணம் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
ரெயில் மோதி தொழிலாளி பலி
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் நாகலிங்கம் (வயது 32). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை மோசூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது.

இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்தன் தலைமையிலான போலீசார், நாகலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com