ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பலி

திருவிடைமருதூ அருகே ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பலி
Published on

திருவிடைமருதூர்,

திருவிடைமருதூ அருகே ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தி.மு.க. பிரமுகர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலா(வயது 42). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா. தி.மு.க. நகர துணை செயலாளரான இவர், திருபுவனம் சன்னதி தெருவில் பட்டு ஜவுளி விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் ஏல சீட்டும் நடத்தி வருகிறார்.நேற்று இரவு 9.30 மணி அளவில் திருநாகேஸ்வரம் ரயில்வே கேட் அருகே பாலா மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கும்பகோணம் செல்லும் தண்டவாளப்பகுதியில் நடந்து சென்றார்.

ரெயிலில் அடிபட்டு சாவு

அப்போது கும்பகோணம் நோக்கி வந்த ஒரு ரயில் பாலா மீது மோதியது. இதில் உடல் சிதறி பாலா பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் பாலாவின் உறவினர்கள், திருபுவனம் பகுதி தி.மு.க.வினர் ஏராளமானோர் வந்து குவிந்தனர். மேலும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.ரெயிலில் அடிபட்டு தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com