திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் கடும் அவதி

திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் கடும் அவதி
Published on

சிக்னல் கோளாறு

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு மற்றும் மோசூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நேற்று காலை 7 மணியளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அரக்கோணம் வழித்தடத்தில் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

ரெயில் சேவை பாதிப்பு

ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதியுற்றனர். இந்த சிக்னல் கோளாறால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வந்த ரெயில்வே ஊழியர்கள் சிக்னல் கோளாறை சரி செய்த பின்னர் அங்கிருந்து புறநகர் ரெயில்கள் புறப்பட்டு சென்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com