“எந்த தேர்வையும் சந்திக்க மாணவர்களை தயார்படுத்துவோம்” - செங்கோட்டையன்

எந்த தேர்வையும் சந்திக்க மாணவர்களை தயார்படுத்துவோம் என்றார் பள்ளிக் கலவித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
“எந்த தேர்வையும் சந்திக்க மாணவர்களை தயார்படுத்துவோம்” - செங்கோட்டையன்
Published on

புதுடெல்லி

அமைச்சர் செங்கேட்டையன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது

மாணவியின் தற்கொலை பெரும் வேதனை தரும் ஒன்றாக இருக்கிறது. எங்களைப் போன்றவர்கள் எண்ணிப்பார்க்க முடியாத நிகழ்வு அது. அவரது குடும்பத்துக்கு எங்கள் துறை சார்பாக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று இடர்பாடுகள் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும், மாணவர்களின் மனதில் அச்சம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் விரைந்து பணியாற்றி வருகிறோம்.

எதிர்காலத்தில் எந்த தேர்வு வந்தாலும் அதை சந்திப்பதற்கு மாணவர்களை தயார்படுத்த இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com