விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
Published on

தேவகோட்டை, 

தேவகோட்டை வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பஞ்சாயத்து கிராமமான எழுவன்கோட்டை கிராமத்தில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் காளிமுத்து தலைமை தாங்கி இத்திட்டம் பற்றியும், இத்திட்டத்தின் மானிய விவரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் கால்நடைகள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும், கால்நடை வளர்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார். சிறப்பு பயிற்சியாளராக சேது பாஸ்கரா வேளாண்மைக்கல்லூரி பேராசிரியர் கருப்புசாமி கலந்து கொண்டு மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும், கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும், விவசாயிகள் அடைய கூடிய நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் மண் புழு உரம் தயாரித்தல், லாபகரமான முறையில் காளான் வளர்ப்பு பற்றியும், இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல் பற்றியும் எடுத்துரைத்தார். பஞ்சக்காவ்யா தயாரித்தல் செயல்விளக்கமாக விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டு இதன் நன்மைகள் மற்றும் இதனால் பெறக்கூடிய மகசூல் பற்றி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் எடுத்துரைத்தனர். முகாம் ஏற்பாட்டை வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரசாந்த் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலளார்கள் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com