

காரியாபட்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் சாரணர் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பாரத சாரணர் இயக்கத்தின் மாநில உதவி பயிற்சியாளர். மெகபூப் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கு சாரணர் இயக்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை செயின்ட் மேரிஸ் பள்ளியின் சாரணர் ஆசிரியர் பிரபாகரன் செய்திருந்தார். பயிற்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கீதா மேரி பாராட்டினார்.