ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
Published on

பழனி வட்டார கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான கற்றல், கற்பித்தல் பயிற்சி நேற்று நடைபெற்றது. பழனி நகராட்சி பள்ளியில் நடந்த பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்குமார் கலந்து கொண்டார். இந்த பயிற்சியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாதந்தோறும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அந்தந்த பாட ஆசிரியர்கள் மொத்தமாக கலந்துகொள்வதால் மாணவர்களுக்கு எவ்வாறு எளிதாக கற்பிப்பது பற்றி கருத்து பரிமாற்றம் கிடைக்கிறது. இதேபோல் எளிதாக பாடங்களை கற்பிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com