சிக்கனமான தீவன உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் சிக்கனமான தீவன உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
சிக்கனமான தீவன உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அனுமந்தபுரம் கிராமத்தில் சிக்கனமான தீவன உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் பயிற்சி நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட கோ 5, கோ 6, கோ.எப்.எஸ்.31, கோ எப்.எஸ்.29, ஆப்பிரிக்க நெட்டை மக்காச்சோளம் மற்றும் கினிப்புல் போன்றவற்றை பயிரிடும் முறை குறித்தும், புரதச்சத்து நிறைந்த வேலி மசால் மற்றும் தீவன தட்டப்பயிறு, நரி பயிறு போன்றவற்றை எவ்வாறு சாகுபடி செய்வது குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை டாக்டர் சபாபதி பேசினார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன் பேசுகையில், கலப்பு தீவனங்களை கால்நடைகளின் உற்பத்திக்கு ஏற்றவாறு கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி வழங்க வேண்டும். கலப்பு தீவனத்திற்கான இடுபொருட்களில் ஏதேனும் இரண்டு விளை நிலங்களில் கிடைக்கப்பெற்றால் சொந்தமாகவே கலப்புத் தீவனத்தை அவர்களே தயாரித்துக் கொள்ளலாம். வைகோலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வைக்கோலை வீணடிக்காமல் நல்ல முறையில் காய வைத்து பரண் மேல் போர் அடித்து அதன் மீது பாலிதீன் தாளால் மூடி பாதுகாக்க வேண்டும் என்றார்.இப்பயிற்சியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 50 பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com