வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரியில் வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
Published on

நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம், நெல்லை தொலைநிலைக் கல்வி இயக்குனரகம் இணைந்து வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு சுயவேலைவாய்ப்பு பயிற்சியினை நடத்தியது. நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலைய கால்நடை விரிவாக்க கல்வித்துறையில் நடைபெற்ற பயிற்சியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி இனங்கள், கொட்டகை மேலாண்மை, தீவன மேலாண்மை, நோய்களை தடுக்கும் முறைகள், கட்டுப்படுத்தும் முறைகள், மரபுசார் மூலிகை மருத்துவம், காப்பீடு, கடனுதவி வசதிகள் குறித்து பல்வேறு துறை பேராசிரியர்கள் விளக்கி கூறினர்.

பயிற்சி நிறைவு நாள் விழாவுக்கு கல்லூரி முதல்வர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குனர் அனில்குமார் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக உதவி பேராசிரியர் ஜென்சிஸ் இனிகோ வரவேற்று பேசினார். முடிவில், கால்நடை விரிவாக்க கல்வித்துறை தலைவர் திலகர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com