பாலின கிளப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

பாலின கிளப் பாடத்திட்டம் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்தது.
பாலின கிளப் பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
Published on

இந்தியாவிலேயே முதன் முறையாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை மாநகராட்சியில் 'பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்' உருவாக்கப்பட்டது. இது பல துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஏற்றதாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வளர்ப்பதை அடிப்படையாக கொண்ட 'பாலின கிளப்' என்ற பாடத்திட்டம் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்துடன் இணைந்து விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பள்ளி மாணவர்களிடம் பாலின சமத்துவ உணர்வை வளர்க்க உதவும்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு இதுகுறித்த பயிற்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. அப்போது, ஆசிரியர்களுக்கு பாடங்கள் எடுப்பது, விவாதங்களை எப்படி கையாள்வது? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com