தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம் கட்ட ஒருநாள் பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை பேசினார். பயிற்சியில் கருத்தாளர்களாக இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியப் பயிற்றுனர்கள் லிங்கேஸ்வரி, சுபதர்ஷினி, கமலாதேவி, செல்வம், ஈஸ்வரன், கற்பகம், முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 164 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மையங்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com