பயிற்சி பட்டறை

நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.
பயிற்சி பட்டறை
Published on

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் வணிகவியல் துறை சுயநிதிப்பிரிவு சார்பில், எம்பிராயடரிங் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சி பட்டறை நடைபெற்றது. பேராசிரியர் மரிய கிறிஸ்டின் நிர்மலா வரவேற்று பேசினார். முதல்வர் ராஜன், தலைமை தாங்கி புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். உள்தர உறுதி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புஷ்பராஜ் பயிற்சியின் அவசியம் பற்றி வாழ்த்தி பேசினார். துறைத்தலைவர் மனோகர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து மாணவர் திறன் மேம்பாட்டின் அவசியத்தை விளக்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் அதிகாரம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு சங்க நிறுவன தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பெண்களின் பெருமைகளையும் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தென்காசி, சஞ்சய் அகாடமி நிறுவனர் செண்பகவல்லி பயிற்சியின் நோக்கம் பற்றி பேசி குழு மூலமாக மாணவர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர் திறன் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சுஜா பிரேமரஜினி, லதா, மனோகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com