அரசு பள்ளிகளில் இடமாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்: 67,390 ஆசிரியர்கள் விண்ணப்பம்

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 7 ஆயிரத்து 249 பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 34,071 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கலந்தாய்வு
Published on
Updated on

சென்னை,

அரசு பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (எமிஸ் தளம்) இன்று முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மாதம் 22-ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி முன்னுரிமைப் பட்டியல் நேற்று வெளியானது.

தொடக்கக்கல்வி

அதன்படி தொடக்கக்கல்வியில் 21 ஆயிரத்து 372 இடைநிலை ஆசிரியர்கள். 4 ஆயிரத்து 447 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 1,003 நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 7 ஆயிரத்து 249 பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 34,071 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேல்நிலைப்பள்ளி

அதேபோன்று பள்ளிக்கல்வியில் 17 ஆயிரத்து 426 பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆயிரத்து 475 முதுநிலை ஆசிரியர்கள், 1,269 உடற்கல்வி ஆசிரியர்கள், 537 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 978 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 981 கணினி ஆசிரியர்கள் என பல்வேறு பதவிகளுக்கு 33 ஆயிரத்து 319 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறையில் 67 ஆயிரத்து 390 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்துக்குள்) இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com