10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்-கலெக்டர் அதிரடி உத்தரவு

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கற்பகம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்-கலெக்டர் அதிரடி உத்தரவு
Published on

பணியிட மாற்றம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 10 தாசில்தார்களை திடீரென்று பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கற்பகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி வேப்பந்தட்டை தாலுகா தாசில்தார் சரவணன் பெரம்பலூர் தாசில்தாராகவும், பெரம்பலூர் தாலுகா தாசில்தார் கிருஷ்ணராஜூ ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குன்னம் தாலுகா தாசில்தார் அனிதா பெரம்பலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், பெரம்பலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் சத்தியமூர்த்தி ஆலத்தூர் தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டனர். ஆலத்தூர் தாலுகா தாசில்தார் முத்துகுமரன் குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சின்னதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

நிர்வாக காரணங்களுக்காக...

வருவாய் பேரிடர் மேலாண்மை தாசில்தார் துரைராஜ் காலியாக இருந்த பெரம்பலூர் கலால் மேற்பார்வை மேலாளராகவும் மாற்றப்பட்டனர். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் பறக்கும் படை தனி தாசில்தார் மாயகிருஷ்ணன் வேப்பந்தட்டை தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் சித்ரா மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் பறக்கும் படை தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேப்பந்தட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோவிந்தம்மாள் குன்னம் தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கண்ட 10 தாசில்தார்கள் நிர்வாக காரணங்களுக்காக கலெக்டர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கலாம், என்று கலெக்டர் அலுவலக வட்டார தரப்பில் கூறப்படுகிறது. ஒரே நாளில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்தது தாசில்தாரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com