12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Published on

சென்னை, 

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கீழ்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்ட கலெக்டராக பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக தட்பகராஜ் , தென்காசி மாவட்ட கலெக்டராக கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண் ராஜ், வேலூர் மாவட்ட கலெக்டராக சுப்புலட்சுமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக பாஸ்கர பாண்டியன், வேளாண்மைத்துறை இயக்குனராக பி. முருகேஷ் , தோட்டக்கலை இயக்குனராக பி.குமாரவேல் பாண்டியன், அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனராக எம். லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனராக ஜி. பிரகாஷ்,  வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன், இவ்வாறு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com