13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.வெங்கடாச்சலம் நில சீர்திருத்தத்துறை ஆணையாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலையரசி வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக சந்திரகலா , சமூக நலத்துறை ஆணையராக  அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிகுமார் ,  ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் , தமிழக பொதுத்துறை துணை செயலாளர் பத்மஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார் நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார் பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார் .

வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன் , நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ், ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com