15 தாசில்தார்கள் பணி இடமாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்த 15 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டுள்ளார்.
15 தாசில்தார்கள் பணி இடமாற்றம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்த 15 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டுள்ளார்.

பணி இட மாற்றம்

சிவகங்கை தாசில்தார் பாலகுரு, மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு பிரிவு) தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். காரைக்குடி மண்டல துணை தாசில்தார் சிவராமன் பதவி உயர்வு பெற்று சிவகங்கை தாசில்தாராக நியமிக்கப்பட்டார். சிவகங்கை மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் பதவி உயர்வு பெற்று தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.

சாக்கோட்டை மண்டல துணை தாசில்தார் முபாரக் உசேன் பதவி உயர்வு பெற்று சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி தாசில்தாராகவும், ஏற்கனவே இங்கு பணிபுரிந்த மகாதேவன் சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறையில் ஆலய நிலங்கள் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டார்.

தேர்தல் பிரிவு

ஆலய நிலங்கள் தனி தாசில்தார் ராஜரத்தினம் காளையார் கோவில் தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக பணி புரிந்த பரிமளா பதவி உயர்வு பெற்று காரைக்குடி குடிமை பொருள் தனி தாசில்தாராகவும், மானாமதுரையில் தேர்தல் பிரிவு தனி துணை தாசில்தார் புஷ்பலீலா பதவி உயர்வு பெற்று தேவகோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், இளையான்குடியில் தேர்தல் பிரிவில் தனி துணை தாசில்தார் முருகன் பதவி உயர்வு பெற்று சிவகங்கை டாஸ்மாக் நிறுவன தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டார்.

திருப்பத்தூரில் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த கிருஷ்ணகுமார் பதவி உயர்வு பெற்று காரைக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ஏற்கனவே இங்கு பணிபுரிந்த அசோக் குமார் தேவகோட்டை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டார்.

கலெக்டர் உத்தரவு

காளையார் கோவிலில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மேசைய தாஸ் சிவகங்கை கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், ஏற்கனவே இங்கு இருந்த மாணிக்கவாசகம் சிங்கம்புணரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலகத்தில் எல்.பிரிவு தலைமை உதவியாளராக இருந்த பொற்கொடி தேவி பதவி உயர்வு பெற்று காளையார் கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், விருதுநகர் முத்திரைத்தாள் தனி தாசில்தாராக இருந்த சிவ சம்போ சிவகங்கை அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் பிறப்பித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com