20 தாசில்தார்கள் இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் 20 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
20 தாசில்தார்கள் இடமாற்றம்
Published on

நெல்லை மாவட்டம் அம்பை சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயலட்சுமி, நெல்லை தாசில்தாராகவும், நெல்லை தாசில்தார் வைகுண்டம் சேரன்மாதேவி கோட்டக்கலால் அலுவலராகவும், சேரன்மாதேவி கோட்டக்கலால் அலுவலர் ரமேஷ் சேரன்மாதேவி தாசில்தாராகவும், சேரன்மாதேவி தாசில்தார் விஜயா மானூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், மானூர் சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் இருதயராஜ், நெல்லை கலால் உதவி ஆணையாளர் அலுவலக மேலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை கலால் உதவி ஆணையாளர் அலுவலக மேலாளர் ஆவுடையப்பன், சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாஸ்பிரியன், நாங்குநேரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், நாங்குநேரி சமூக பாதுகாப்பு திட்டத்தாசில்தார் தங்கராஜ், நெல்லை கோட்டக்கலால் அலுவலராகவும், நெல்லை கோட்டக்கலால் அலுவலர் இசக்கிபாண்டி கேபிள் டிவி தாசில்தாராகவும், கேபிள் டிவி தாசில்தார் ஆதிநாராயணன் சேரன்மாதேவி ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தாராகவும், சேரன்மாதேவி ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் ராஜேஸ்வரி நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரியப்பன் நெல்லை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பாஸ்கரன் நதிநீர் இணைப்பு திட்ட அலகு-4 தாசில்தாராகவும், நதிநீர் இணைப்பு திட்ட அலகு-4 தாசில்தார் செல்வகுமார் நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு தாசில்தாராகவும், நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு தாசில்தார் பிரபாகர்அருண்செல்வம், திசையன்விளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், திசையன்விளை சமூக பாதுகாப்பு திட்டத்தாசில்தார் பத்மப்பிரியா திசையன்விளை தாசில்தாராகவும், திசையன்விளை தாசில்தார் முருகன் மானூர் தாசில்தாராகவும், மானூர் தாசில்தார் முத்துலட்சுமி சேரன்மாதேவி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், சேரன்மாதேவி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்கவித்தங்கம் நதிநீர் இணைப்பு திட்ட அலகு-6 தாசில்தாராகவும், நதிநீர் இணைப்பு திட்ட அலகு-6 தாசில்தார் முகம்மதுயூசுப் அம்பை சமூக பாதுகாப்பு திட்டத்தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com