3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்

நெல்லை, தென்காசியில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்
Published on

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பொன்ரகு, நெல்லை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், மாவட்ட குற்ற ஆவணக்காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு சென்னை தலைமையிடத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டார்.

அதேபோல் தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த தனுசியா, நெல்லை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று காலையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்டவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com