கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் இடமாற்றம்- தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கோவை மாவட்ட புதிய கலெக்டராக நாகராஜன், போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் இடமாற்றம்- தேர்தல் ஆணையம் நடவடிக்கை
Published on

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித்சரண் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டராக எஸ்.நாகராஜன் மற்றும் போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com