எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

விழுப்புரம் பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக 28, 30 ஆகிய தேதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* திருச்சி-சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16796), 28, 30-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 10 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக காலை 11.45 மணிக்கு புறப்படும்.

* மன்னார்குடி-பகத்கி கோதி வாராந்திர எக்ஸ்பிரஸ்(16864), 30-ந் தேதி மன்னார்குடியில் இருந்து மதியம் 12.25 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மதியம் 1.25 மணிக்கு புறப்படும்.

* எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ்(12635), 30-ந் தேதி எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக 2.40 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com