

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் 2 திருநங்கைகள். இவர்கள் இருவரும் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்தனர். இந்த நிலையில் குரோம்பேட்டைக்கு 2 பெண்கள் துணி எடுப்பதற்காக வந்துள்ளனர். துணி எடுத்துவிட்டு அப்பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த திருநங்கைகல் 2 பெண்களையும் மறித்துள்ளனர்.
பின்னர், அவர்களிடம் இருந்த காசுகளை மிரட்டி கேட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 2500 ஐ மிரட்டி பெற்றுள்ளனர். அந்தவேளை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் திருநங்கைகளை மடக்கி பிடித்து கைது செய்தார். பின்னர், அந்த பெண்களிடம் இருந்து திருநங்கைகள் பெற்ற ரூ. 2500 ஐ அவர்களிடம் ஒப்படைத்தார். பொதுமக்களை மிரட்டி திருநங்கைகள் பணம் பெறுவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.