பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்

பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

திருச்சி மலைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. சம்பவத்தன்று இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மதுபோதையுடன் அலங்கோலமாக கிடந்தார். இதனை கண்ட தனலட்சுமி அந்த பெண்ணை அங்கிருந்து எழுந்து போகுமாறு கூறினார். ஆனால் அந்த பெண்ணோ அதனை காதில் வாங்காமல் தனலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி தான் வைத்திருந்த கம்பால் (லத்தி) அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்புவதற்காக மிரட்டி தாக்கினார். இதனை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியதை தொடர்ந்து அந்த வீடியோ வைரலானது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்ட திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, தனலட்சுமியை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com