

சென்னை,
தமிழகத்தில் பதிவு செய்யப்படும் கார்களில் குறிப்பிட்ட சில வகை கார்களை மட்டுமே பொதுப் போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சொகுசு கார்கள் உள்பட அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.