ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனே வழங்க வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை முடித்து சம்பள உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் வைகுண்ட மணி மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்ககளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com