போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தொழிலாளர் சட்ட உரிமைகள் தொழிற்சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் சக்திவேல், மண்டல செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வுபெறும் போக்குவரத்து தெழிலாளர்களுக்கு உடனுக்குடன் பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தெழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை விரைவாக வேண்டும். அதேபோல் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பிரிவில் அலுவலக பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com