சென்னை பல்லவன் சாலையில் நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை பல்லவன் சாலையில் நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை பல்லவன் சாலையில் நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னை பல்லவன் சாலையில் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வேலைபளு திணிப்பை கைவிட வேண்டும், 1.4.2003-ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களை கழக ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும், ஓய்வூதியதாரர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினார்கள். வேலை நிறுத்த போராட்டங்கள் நடத்துவதற்கு வேண்டிய அவசியம் இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதியும், தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதியும் அதனை நடத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் போக்குவரத்து செயலாளர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்டதன் பேரின் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com