பஸ், ரெயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம்: சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம்?


பஸ், ரெயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம்: சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம்?
x
தினத்தந்தி 24 Jun 2025 11:58 AM IST (Updated: 24 Jun 2025 1:22 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை,

சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்தாக பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளன. இதில் இதுவரை மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னையில் பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாத இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலி மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும், எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பயணிகள் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story