16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது
Published on

தூத்துக்குடியை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது 42). இவர், சென்னை கோயம்பேட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் குடும்ப வறுமை காரணமாக 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

அந்த சிறுமியிடம் செந்தில் ராஜா, மாதந்தோறும் சம்பளம் வேண்டுமென்றால் தன்னிடம் தினமும் நெருக்கமாக இருக்க வேண்டும் என மிரட்டியதுடன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த சிறுமி, தனது உறவினர் மூலமாக இதுபற்றி கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலீசார் டிராவல்ஸ் உரிமையாளர் செந்தில்ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com