

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக பிரச்சினையால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 124ஏ, 153, 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வேல் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, உளூந்தூர் பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.