தேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன்? என்ற கேள்விக்கு ஆவேசம் அடைந்த வைகோ

தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என்ற கேள்விக்கு வைகோ ஆவேசம் அடைந்தார்.
தேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன்? என்ற கேள்விக்கு ஆவேசம் அடைந்த வைகோ
Published on

சென்னை,

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலை புலிகளுக்காக வி.பி.சிங்கிடம் வாதாடியவன் நான்; இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்வேன். எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பேன், மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன். இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது என்றார்.

தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த தேர்வையும் எழுத முடியாத நிலை ஏற்படும் என கவலை தெரிவித்தார். இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

அப்போது தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் சற்று ஆவேசம் அடைந்த வைகோ, இவ்வாறு என்னிடம் கேள்வி கேட்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com