வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல்

பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சியில் வி.ஐ.பி. நகர் அமைந்துள்ளது.
வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல்
Published on

பல்லடம்

பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சியில் வி.ஐ.பி. நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு நன்கு வளர்ந்திருந்த 8 வேப்ப மரங்களை யாரோ முழுமையாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கிருந்த சில மரங்களின் பெரிய, பெரிய கிளைகளையும் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com