மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா
Published on

தாராபுரம்

தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமை தாங்கினார். அப்போது தாராபுரம் வட்ட சட்ட குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான நீதிபதி எம்.தர்மபிரபு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு, வழக்கறிஞர்சங்க தலைவர் கலைசெழியன், செயலாளர், ராஜேந்திரன், துணைச்செயலாளர் வாரணவாசை, அரசு வழக்கறிஞர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com