

சென்னை,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். இதில், 17 பேர் உயிரிழந்தனர்.
குரங்கணி காட்டுத்தீ பற்றி இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை துவங்கப்பட்டது. மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாத பாதையில் அனைவரும் சென்றுள்ளனர் என்றார்.