உடுமலைப்பேட்டையை சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவியாக ரூ.1 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

உடுமலைப்பேட்டையை சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவியாக ரூ.1 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உடுமலைப்பேட்டை பூச்சிகொட்டாம்பாறையில் வீடு, கேரளாவில் படிப்பு, அம்மாநில அரசின் சிறப்பு பஸ்சில் பயணம், 10-ம் வகுப்பில் 95 சதவீதம் பெற்றிருக்கும் பழங்குடியின மாணவி ஸ்ரீதேவியிடம் பேசினேன்.

வனப்பகுதி மக்களுக்காக டாக்டராகும் அவரது கனவை வாழ்த்தி, கல்வி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com