கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் நினைவு நாள் - ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி

அஞ்சலை அம்மாளின் நினைவு நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம் என ஆதன் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் நினைவு நாள் - ஆதவ் அர்ஜுனா புகழஞ்சலி
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சமரசமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்; அதற்காக கடும் சிறைத் தண்டனைகளை எதிர்கொண்டபோதும் கலங்காத மன வலிமைக்குச் சொந்தக்காரர்; காந்தியார் போன்ற மாபெரும் தலைவர்களும் வியந்து போற்றிய அளவிற்குத் தீரமுடன் செயற்பட்ட விடுதலை வேட்கையின் அடையாளம்; மது ஒழிப்பை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர்.

சமத்துவ சமூக சேவைக்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்த மக்கள் சேவகர், நம் கொள்கைத் தலைவர்களில் ஒருவர் அஞ்சலை அம்மாளின் நினைவு நாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com