பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் நினைவு நாள்: செல்வப்பெருந்தகை அஞ்சலி

பிர்சா முண்டா, நீர், வனம் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பிர்சா முண்டா அவர்களின் நினைவு நாளில் அவருக்குப் பணிவான அஞ்சலிகள். பழங்குடியினரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மாபெரும் போராளியான பிர்சா முண்டா, நீர், வனம் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

அவரது போராட்டமும், துணிச்சலும், கொள்கைகளும் நீதி, சமத்துவம் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராட என்றும் நம்மை ஊக்குவிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com