திருச்சி: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்பு!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பாம்பைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்பு!
மலைப்பாம்பு
Published on: 

திருச்சி,

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில், இன்று (வெள்ளிகிழமை) தெத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர்.

வனத்துறையினருக்கு தகவல்

உடனடியாக இது குறித்து துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பாம்பைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பத்திரமாக மீட்பு

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்த 10 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். பின்னர், மீட்கப்பட்ட மலைப்பாம்பை அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாகக் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X